​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனா தொற்றால் மன உளைச்சலுக்கு ஆளாகும் சீனர்கள்

Published : Feb 04, 2020 4:37 PM

கொரோனா தொற்றால் மன உளைச்சலுக்கு ஆளாகும் சீனர்கள்

Feb 04, 2020 4:37 PM

கொரோனாவைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ள சீனாவில் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி அழுதால் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொற்று பரவுவதால் சீனாவில் பள்ளிகளும் அலுவலகங்களும் மூடப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். நோய் தொற்று, நெருங்கிய உறவினர்களின் இழப்பு போன்றவற்றால் பலர் மன உளைச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இவர்கள் தனியாக அமர்ந்து நன்கு வாய் விட்டு அழுதால் மன அழுத்தம் குறையும் என்று பெய்ஜிங்கில் உள்ள ஹுயிலோங்குவான் மருத்துவமனை (Beijing Huilongguan Hospital) மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

குத்துச்சண்டை பயிற்சி, பாடுவது ஆகியவற்றாலும் மனச்சுமை குறையும் என்கின்றனர் இவர்கள். இதனிடையே கொரோனாவைரஸ் தாக்குதலால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சீனாவின் அன்ஹுயி (Anhui) மாகாணத்தில், 24 மணி நேர ஆலோசனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.