ராணுவ வீரர்களுக்கு சிறப்பு உணவு, உடைகள் கிடைப்பதில் தாமதம்: சிஏஜி அதிர்ச்சித் தகவல்
Published : Feb 04, 2020 4:03 PM
ராணுவ வீரர்களுக்கு சிறப்பு உணவு, உடைகள் கிடைப்பதில் தாமதம்: சிஏஜி அதிர்ச்சித் தகவல்
Feb 04, 2020 4:03 PM
சியாச்சின் மற்றும் டோக்லாம் ஆகிய பனிப்பிரதேச எல்லைகளில், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு, கடுங்குளிரை சமாளிப்பதற்குத் தேவையான உணவும், உறைபனி தடுப்பு கவச உடைகளும், சரியாக கிடைப்பதில்லை என இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அமைப்பான சிஏஜி தெரிவித்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அந்த அமைப்பின் அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. 2015ஆம் ஆண்டு முதல், 2018ஆம் ஆண்டு வரையில், பனிப்பிரதேச பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கான, சிறப்பு உடைகள் உள்ளிட்டவற்றின் கொள்வனவில் கடுமையான தேக்கநிலை நீடித்துள்ளதாக சிஏஜி தெரிவித்திருக்கிறது.
இதனால், சியாச்சின், டோக்லாமில், உறைபனி சூழ்ந்த பகுதியில், நாட்டை காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு, சீருடைகள், உணவு பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.