சீனாவில் கொரானா வைரஸ் வவ்வால்களிடமிருந்து பரவியிருக்கலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் வூகான் நகரில், கடல் உணவுகள் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் மார்க்கெட்டில் இருந்தே, கொரானா வைரஸ் பரவியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், வூகான் மார்க்கெட் பகுதியை சேர்ந்த, கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் நுரையீரலில் இருந்து திரவ மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
கொரானா வைரஸ் சுவாச மண்டலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்பதால், நுரையீரல் திரவ மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் கொரானா வைரஸின் ஜீன்தொகுதி, வவ்வால்களில் இருந்து பரவி சார்ஸ் நோயை பரப்பிய வைரஸோடு 89.1 சதவீதம் ஒத்துப்போயுள்ளது. இந்த முதல் ஆய்வின் மூலமே, புதிய வகை கொரானா வைரஸ் பரவுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.