​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனாவின் பிடியில் சிக்கி உயிருக்கு போராடும் வயதான தம்பதி.! சீனாவில் உருக்கம்

Published : Feb 04, 2020 2:59 PM

கொரோனாவின் பிடியில் சிக்கி உயிருக்கு போராடும் வயதான தம்பதி.! சீனாவில் உருக்கம்

Feb 04, 2020 2:59 PM

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வைரசால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் வயதான தம்பதியின் புகைப்படம் ஒன்று வெளியாகி உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனா மற்றும் அதன் அண்டை நாடுகள் என துவங்கி சுமார் 30 நாடுகளுக்கு பரவியுள்ளது உயிர்கொல்லியான கொரோனா. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பல உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றன. தற்போது வரை 420-க்கும் மேற்பட்டோர் உயிர் கொல்லி கொரோனாவின் பிடியில் உயிரை விட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவிடம் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வயதான தம்பதியரின் புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. முதியவர்கள் இருவருக்கும் 80 வயதிற்கு மேல் இருக்கும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவருக்கும் ICU வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மிகவும் சோர்வான நிலையில் படுத்தப்படுக்கையாக காணப்படும் கணவன், மனைவி இருவரும் கைகளை கோர்த்தபடி பேசி கொண்டனர். இதில் மனைவி பேச கூட முடியாதபடி மிகவும் பலவீனமாக காணப்பட்டார். தம்பதியர் பேசி கொள்ளும் உருக்கமான தருணம் அடங்கிய நிகழ்வு வீடியோ மற்றும் புகைப்படங்கள் என ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இதை பார்த்த பலரும் இந்த காட்சியை காண்பதற்கே மிகவும் உணர்ச்சிமயமாக உள்ளது. இருவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்திப்பதாக பலரும் கமெண்டுகள் பதிவிட்டனர்.