மலேசியாவிடம் இருந்து கூடுதல் பாமாயில் இறக்குமதி : பாகிஸ்தான் அறிவிப்பு
Published : Feb 04, 2020 2:55 PM
மலேசியாவிடம் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ள நிலையில், அந்நாட்டிடம் இருந்து அதிக பாமாயிலை இறக்குமதி செய்ய போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மலேசியா பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்த கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இருப்பினும் அதை கண்டுகொள்ளாமல் அவர் கருத்து வெளியிட்டதால், மலேசியாவிடம் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு அதை நிறுத்த உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மகாதீர் முகமதை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா இறக்குமதியை நிறுத்திவிட்டதால் மலேசியாவுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை சரி செய்ய தங்களது நாடு உதவும் என்றார்.