கொரானா வைரஸ் பரவுவதை முதன் முதலில் கண்டறிந்த டாக்டருக்கு, கொரானா நோய் தாக்கியுள்ளது.
சீனாவின் வூகான் நகரை சேர்ந்த 34 வயது மருத்துவர் லி வென்லியாங் (Li Wenliang), கடல் உணவுகள் விற்பனை செய்யும் உள்ளூர் மார்க்கெட்டை சேர்ந்த 7 பேர் புதிய வகையான கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த டிசம்பர் 30ஆம் தேதி வீ சாட் மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.அவர் அனுப்பிய செய்தி, ஆன்லைனில் வைரலாக பரவியதால், வதந்தி பரப்பியதாக லி வென்லியாங் மீது அதிகாரிகளால் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் லி கூறியது உண்மையானதுடன், கொரானாவின் கோரப்பிடியில் சீனா சிக்கியது.கொரானா வைரஸ் பாதித்த நோயாளி என்று தெரியாமல் சிகிச்சை அளித்தபோது, லி வென்லியாங்கிற்கும் கடந்த 10ஆம் தேதி கொரானா தொற்றியுள்ளது. இந்த விவகாரம், கருத்து சுதந்திரத்திற்கு எதிராக அரசு கையாளும் கடுமையான தணிக்கை முறைகள் மீது சீனர்களுக்கு கோபத்தையும், லி வென்லியாங் மீது அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.