​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நோட்டீஸ்..!

Published : Feb 04, 2020 1:57 PM

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நோட்டீஸ்..!

Feb 04, 2020 1:57 PM

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் தொடர்பான விவகாரத்தில், சபாநாயகர் ஏன் குறித்த கால அளவிற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டு தமிழக சட்டப்பேரவை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது, தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்பட 11 அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதை அடுத்து கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களை  தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீது சபாநாயகர் முடிவு எடுக்காத நிலையில், தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து தி.மு.க. தரப்பில் கொறடா சக்கரபாணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதை இன்று விசாரித்த  தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு  விசாரணையை வரும் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. அத்துடன், தகுதி நீக்க மனு மீது சபாநாயகர் ஏன் குறித்த கால அளவிற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டு தமிழக சட்டப்பேரவை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.