நிர்பயா மரண தண்டனை கைதிகளை விரைவில் தூக்கில் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார்.
இன்று மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங் எழுப்பினார். நிர்பயா வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம் தண்டனையை அறிவித்த போதும் அதை நிறைவேற்ற முடியாமல் இழுத்தடிப்பதால் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர் என்று அவர் கூறியதை வெங்கையா நாயுடு ஏற்றுக் கொண்டார்.
சம்பந்தப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் அனைத்து விதமான சட்ட நிவாரண வழிகளும் முடிந்துள்ள நிலையில், தண்டனை நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கும் நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளதை அனுமதிக்க முடியாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.