டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறுகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிகாலம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்றும், அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, பிப்ரவரி 11ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை எண்ணிக்கை நடைபெறும் என சுனில் அரோரா கூறினார்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெறும் தேர்தலில் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தேர்தல் அறிவிப்பை அடுத்து, டெல்லியில் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.