​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நித்யானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்பட்ட பிராணாசாமி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்

Published : Jan 06, 2020 3:32 PM

நித்யானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்பட்ட பிராணாசாமி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்

Jan 06, 2020 3:32 PM

நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்பட்ட பிராணாசாமி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஈரோட்டை சேர்ந்த அங்கம்மாள் என்பவர், ஆட்கொணர்வு மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தனது மகனான பல் மருத்துவர் முருகானந்தம், பிடதி ஆசிரமத்தில் சேர்ந்து பிராணாசாமி என்ற பெயருடன் இருப்பதாகவும், சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள அவரை மீட்டு ஆஜர்படுத்துமாறும் முறையிட்டிருந்தார்.

இந்நிலையில், பிராணாசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வில் ஆஜராகி, சொந்த விருப்பத்தின்படி ஆசிரமத்தில் தங்கியிருப்பதாகவும், சட்டவிரோதமாக தன்னை அடைத்து வைக்கவில்லை எனவும் தெரிவித்தார். இதை ஏற்று, அவரது தாய் அங்கம்மாள் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

Watch online: https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg