​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல் பங்கில் கலெக் ஷன் தொகையை திருடி சென்றவர்கள் கைது

Published : Jan 06, 2020 3:12 PM

பெட்ரோல் பங்கில் கலெக் ஷன் தொகையை திருடி சென்றவர்கள் கைது

Jan 06, 2020 3:12 PM

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஆட்டோவில் வைக்கப்பட்டிருந்த கலெக் ஷன் தொகையை எடுத்து சென்ற சிறுவன் உட்பட இருவரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்தனர்.

ராயப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கில் கலெக் ஷன் ஆன ஒரு லட்சம் ரூபாயை, பங்கிற்கு சொந்தமான ஆட்டோவின் பின் சீட்டில் ஊழியர்கள் வைத்துள்ளனர். அப்பொழுது பெட்ரோல் போடுவதற்காக பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் ஆட்டோவில் இருந்த தொகையை எடுத்துக்  சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.

அதையடுத்து, அங்கிருந்த  சிசிடிவி கேமரா உதவியுடன் இருவரையும் அடையாளம் கண்ட போலீசார் அவர்களை கைது செய்தனர்.  இருவரிடம் இருந்த 54 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.