சென்னை ராயப்பேட்டையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
கடந்த மாதம் 4ஆம் தேதி அதிகாலையில் கான்ரான் ஸ்மித் சாலையில் நடந்துச் சென்ற ரமேஷ் என்பவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், ஒன்றரை சவரன் செயின் செல்போன் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறிச் செய்தனர்.
பின்னர் 10ஆம் தேதி அதே மூவர் நீலாங்கரையில் பெண் ஒருவரிடம் செல்போனைப் பறித்தனர். இது குறித்து தனிப்படை அமைத்த ராயப்பேட்டை போலீசார், வழிப்பறி கும்பல் தப்பிச் சென்ற காட்சியை மதுரவாயல் வரையிலான சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கைப்பற்றினர்.
அதன் அடிப்படையில் மதுரவாயலைச் சேர்ந்த ரமேஷ், விக்னேஷ் மற்றும் 16 வயது சிறுவனை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செயின், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.