ரூ.132 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு கட்டடங்களை திறந்துவைத்தார் முதல்வர்
Published : Jan 06, 2020 1:51 PM
ரூ.132 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு கட்டடங்களை திறந்துவைத்தார் முதல்வர்
Jan 06, 2020 1:51 PM
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், 36 கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், சுமார் 96 கோடி ரூபாய் சார்பில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களையும், உடுமலை சைனிக் இளநிலை மாணவர்கள் விடுதிக் கட்டடத்தையும் முதலமைச்சர் திறந்துவைத்தார்.
டாஸ்மாக் உபரி பணியாளர்கள் 491 பேர், தமிழ்நாடு வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்குவதன் அடையாளமாக, 7 பேருக்கு, பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.
வனத்துறையில் காலியாக வனக்காவலர்கள் பணியிடங்களுக்குத் தேர்வான 564 பேருக்கு பணி ஆணைகளை வழங்கும் முகமாக, 7 பேருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பணிநியமன ஆணைகளை வழங்கினார்.