பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.175 கோடி மதிப்பிலான ஹெராயின்.. நடுக்கடலில் பறிமுதல்
Published : Jan 06, 2020 1:13 PM
பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.175 கோடி மதிப்பிலான ஹெராயின்.. நடுக்கடலில் பறிமுதல்
Jan 06, 2020 1:13 PM
இந்திய கடலோர காவல் படையும், குஜராத் காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவும் சேர்ந்து, பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை நடுக்கடலில் பறிமுதல் செய்துள்ளனர்.
குஜராத்தின் கட்ச் கடற்கரை வழியாக, பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கடலோரக் காவல்படையுடன் இணைந்து நடுக்கடலில் நடத்திய தேடுதல் வேட்டையில் பாகிஸ்தான் படகு ஒன்று அடையாளம் காணப்பட்டது.
அதனை பின்தொடர்ந்த அதிகாரிகள் ஒரு கட்டத்தில் வெற்றிகரமாக அப்படகை மடக்கி பிடித்து அதனை சோதனையிட்டனர். சுமார் 35 கிலோ ஹெராயின் போதை பொருள் பிடிபட்டது. இதன் சந்தை மதிப்பு 175 கோடி ரூபாய்.
அதை விசைப்படகில் கடத்தி வந்த பாகிஸ்தானியர் 5 பேர் கைது செய்யப்பட்டதாக குஜராத் மாநில டி.ஜி.பி.சிவானந்த் ஜா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் குஜராத் மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கான முயற்சிகளைத் தடுக்க காவல்துறையும்- கடலோரக் காவல்படையும் இணைந்து செயல்பட்டு வருகிறோம்
1,600 கி.மீ நீளமுள்ள கடற்கரையின் பாதுகாப்புக்கு முன்னால் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இது குறித்த விசாரணை தொடர்ந்து நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.