வளைகுடாவில் நீடிக்கும் போர் பதற்றம் உள்ளிட்ட காரணிகளால், நாட்டின் பங்குச்சந்தைகள் இன்று வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வரும் நிலையில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் சரிந்திருக்கிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 367 புள்ளிகள் சரிந்த நிலையில், 41 ஆயிரத்து 97 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. முற்பகல் 11.30 மணியளவில், சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து வர்த்தகமானது.
Also Read : ஈரான் - அமெரிக்கா மோதலால் இந்தியா சந்திக்க காத்திருக்கும் பேராபத்து
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும், 155 புள்ளிகள் சரிந்து, 12 ஆயிரத்து 70 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. இதுதவிர, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயும் மதிப்பும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. நேற்றைய மதிப்பை விட, இன்று, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 32 காசுகள் சரிந்து, 72 ரூபாய் 8 காசாக உள்ளது.
Watch Polimer News Online : https://bit.ly/35lSHIO