இந்தோனேஷியாவில் அடுக்குமாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து
Published : Jan 06, 2020 11:41 AM
இந்தோனேஷியாவில் அடுக்குமாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து
Jan 06, 2020 11:41 AM
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அந்த நகரத்தின் மேற்கு பகுதியான பிரிக்ஜென் கட்டாம்சோவில், கீழ் தளத்தில் கடைகளும் மேல்தளங்களில் குடியிருப்புகளையும் கொண்ட 5 அடுக்குமாடி கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜகார்த்தாவில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தில் கட்டிடம் சேதமடைந்திருக்கலாம் என்றும் அதனால் இடிந்து விழுந்திருக்கலாம் என்றும் மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்தில் சிக்கிய கட்டிடம் குடியிருப்பு-வணிகம் கலந்த கலப்பு இடமாகும். இது தரை தளத்தில் ஒரு வசதியான கடை மற்றும் மேல் தளங்களில் சிறிய வாடகை வீடுகளை கொண்டிருந்தது. இந்தோனேசியாவில் அடிக்கடி நிகழும் கட்டிட விபத்துகள் கவலைகளை எழுப்பியுள்ளன.