மகாராஷ்ட்ரா கூட்டணி அரசு விரைவில் கவிழும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
Published : Jan 06, 2020 11:33 AM
மகாராஷ்ட்ரா கூட்டணி அரசு விரைவில் கவிழும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
Jan 06, 2020 11:33 AM
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கருத்தியல் ஒற்றுமை இல்லாத காரணத்தால், கூட்டணி அரசு விரைவில் கவிழும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தை, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் துவக்கி வைத்த அவர் வீடு வீடாகச் சென்று திட்டம் பற்றி எடுத்துரைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது மராட்டிய மாநிலத்தில் இயற்கைக்கு முரணான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. வங்க தேச அகதிகளின் வருகையை கடுமையாக எதிர்த்த பால் தாக்கரேயின் கொள்கைகளை, சிவசேனா காற்றில் பறக்க விட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக, சிவசேனா, இந்துத்துவா கொள்கையை கைவிட்டு விட்டதாக கூறிய அவர், துறைகள் ஒதுக்கீடு சம்பந்தமாக மராட்டிய கூட்டணி அரசில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளால் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சர்களில் ஒருவர் ராஜினாமா செய்யப் போவது உறுதி. அதன் பிறகு ஏற்படும் சச்சரவுகளால் இப்போதுள்ள மாநில கூட்டணி அரசு நீடிக்காது என்றார்.