பாகிஸ்தானில் சீக்கிய சமூகத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க இந்தியா வலியுறுத்தல்
Published : Jan 06, 2020 11:30 AM
பாகிஸ்தானில் சீக்கிய சமூகத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க இந்தியா வலியுறுத்தல்
Jan 06, 2020 11:30 AM
பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகமாக உள்ள சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறி உள்ள இந்தியா, பெஷாவரில் சீக்கிய இளைஞரை அடித்துக் கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அரசை மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
முன்னதாக கடந்த வெள்ளி அன்று குருநானக் பிறந்த இடமான நான்கனா சாகிப் என்ற சீக்கிய குருத்வாரா மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றது. இது போன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்கள் குறித்து கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தான் அரசை வலியுறுத்தி உள்ளது. இந்த சம்பங்கள் குறித்து இந்திய தரப்பில் இருந்து வெளியிடப்படும் இரண்டாவது எச்சரிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.