பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 20 மீனவர்கள் இந்திய அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று விடுதலை செய்யப்பட்டனர். 20 மீனவர்களும் வாகா எல்லை வழியாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனிடையே சிறையில் இருந்து விடுதலையான இந்தியா மீனவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் பாகிஸ்தான் சிறையில் தாங்கள் நல்லவிதமாக நடத்தப்பட்டதாக கூறினர். 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் கடலோரக் காவல்படையால் தாங்கள் கைது செய்யப்பட்டதாக கூறினர்.
ஆனால் 14 மாத சிறைவாசம் இந்த நாட்டைப் பற்றிய அனைத்து தவறான எண்ணங்களையும் மாற்றி விட்டதாகவும், மாலிர் சிறையிலிருந்து நல்ல நினைவுகளை எங்களுடன் எடுத்துச் செல்கிறோம் என்றும் கூறினார. வேறொரு நாட்டில் இருப்பதைப் போல நாங்கள் ஒருபோதும் உணரவில்லை. சிறை ஊழியர்கள் எங்களிடம் அன்பாக நடந்து கொண்டனர் என இந்திய மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மீனவர்களை விடுதலை செய்ததும் உடனடியாக அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது.