இத்தாலியில் குடித்து கார் ஓட்டியவர் ஏற்படுத்திய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
வடக்குப் பிராந்தியத்தில் உள்ள லூடாகோ அருகில் உள்ள லட்டாச் என்ற இடத்தில் சில ஜெர்மானிய சுற்றுலா பயணிகள் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 சுற்றுலாப் பயணிகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 11 பேர் காயமடைந்தனர். தொடக்கத்தில் இது தீவிரவாதத் தாக்குலாக இருக்கலாம் என்று நினைத்த பொதுமக்கள் மற்றும் போலீசார் கார் ஓட்டியவரை பிடித்த போது அவர், அளவுக்கு அதிகமான போதையில் இருந்தது தெரியவந்தது. உள்ளூரைச் சேர்ந்த அந்த நபரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.