சபரிமலையில் கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மூன்று நாட்களில் சுமார் 3 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
மகரவிளக்குக்காக சபரிமலை டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்பட்டதையடுத்து புத்தாண்டு தினத்தில் மட்டும் சுமார் 5 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தொடர்ந்து சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதனால் கோவிலில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. புல்மேடு , பம்பை நதிக்கரை போன்ற இடங்களிலும் பெரும் திரளாக பக்தர்கள் உள்ளனர்.
பக்தர்களுக்கு கொதிக்கவைக்கப்பட்ட குடிநீர், உணவு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. வனத்துறையினரின் யானை பறக்கும்படை அதிகாரிகளின் பரிசோதனைக்குப் பின்னர் பக்தர்கள் குழுக்களாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
Watch Polimer News Online at https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg