ஹாங்காங்கில் சீன வியாபாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இதையடுத்து ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
சீனாவிலிருந்து வரும் வியாபாரிகளால் ஹாங்காங்கில் சார்ஸ் வைரஸ் கிருமிகள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சீன வியாபாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஷியூங் ஷுயி நகரத்தில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தொடர் போராட்டம் எதிரொலியாக ஹாங்காங்கிற்கான தனது தூதராக இருந்து வந்த வாங் ஜிமினை சீனா அதிரடியாக பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p