அமெரிக்காவில் ஏற்பட்ட தொடர் விபத்துக்களில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
பென்சில்வேனியா பகுதியில் உள்ள பிளஸன்ட் மவுண்ட் என்ற மலைப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது பெரிய வாகனம் ஒன்று மலைப்பாதையில் கீழிறங்கியபோது பின்னால் வந்த கார் ஒன்று அதனை முந்திச் செல்ல முயன்ற போது இடித்து விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து இரு வாகனங்களும் நிறுத்தப்பட்டன. அப்போது தொடர்ந்து வந்த மற்ற வாகனங்களும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில் 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளுர் மக்களின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகள் சென்றதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p