சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிலிங் ஸ்னோ மலை பனியால் போர்த்தப்பட்டது போலிருக்கும் காட்சி, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது.
5 ஆயிரத்து 353 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலையில், சராசரியாக 6 டிகிரி செல்சியஸ் முதல் 12 டிகிரி செல்சியஸ் வரை மிக குறைந்த வெப்பநிலையே நிலவுகிறது. இங்கு வருடாந்திர பனி திருவிழா மற்றும் உலகளாவிய சீன பனிச்சறுக்கு போட்டி கடந்த டிசம்பர் 24 ஆம் தேதியன்று தொடங்கியது.
இதில் தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த பலர் கலந்துக்கொண்டு வருகின்றனர். மேலும் இங்கு நிலவும் பனியின் அற்புத காட்சியினை கண்டுகளிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p