தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.
காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். அவரது ஆங்கில உரையை, சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தமிழில் மொழிபெயர்த்து உரையாற்றுகிறார். ஆளுநர் உரையில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க, பேரவை அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் பிற்பகலில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.
இந்தக் கூட்டத்தில் பேரவைக் கூட்டத் தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும். வரும் வெள்ளிக்கிழமை வரை பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p