குளிர்கால விடுமுறைக்குப் பின் உச்ச நீதிமன்றம் இன்று திறப்பு
Published : Jan 06, 2020 6:20 AM
குளிர்கால விடுமுறைக்குப் பின் உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.
இதையடுத்து பல்வேறு முக்கிய வழக்குகள் அடுத்தடுத்து விசாரணைக்கு வர உள்ளன. முதற்கட்டமாக அஸ்ஸாம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது சட்டப் பிரிவை நீக்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைவதற்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மறுபரிசீலனை கோரும் மனுக்கள் மீதான வழக்கும் அடுத்தடுத்து விசாரணைக்கு வர உள்ளன.
முக்கியமாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மட்டும் 59 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p