​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பீகாரில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான பணி மே 15-ஆம் தேதி தொடங்கும்

Published : Jan 05, 2020 6:33 PM

பீகாரில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான பணி மே 15-ஆம் தேதி தொடங்கும்

Jan 05, 2020 6:33 PM

பீகாரில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான பணி மே மாதம் 15-ஆம் தேதி தொடங்கும் என அம்மாநில துணை முதலமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய மக்கள் தொகை பதிவேடு பணியில் ஈடுபட மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் முற்றிலும் வேறுபாடு இருப்பதாகத் தெரிவித்த அவர், இந்த விவகாரத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.

மேற்கு வங்கம், கேரளா, ராஜஸ்தான் உட்பட எந்த ஒரு மாநிலத்துக்கும் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தையோ, தேசிய மக்கள் தொகை பதிவேட்டையோ அமல்படுத்தாமல் இருக்க அதிகாரம் இல்லை என்றும் சுஷில்மோடி தெரிவித்தார்.