​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Published : Jan 05, 2020 5:53 PM

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Jan 05, 2020 5:53 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

கீழத்தாழனூர் பகுதியில் உள்ளது இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம். அந்த மையத்திற்குள் கடந்த 3ம் தேதி இரவு ஷெட்டரின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த முகமூடி கொள்ளையன், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை காகிதத்தால் மூடி மறைக்கிறான்.

அதன்பின் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றபோது அலாரம் ஒலித்ததால், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இதுகுறித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பியோடிய அந்தநபரை போலீசார் தேடி வருகின்றனர்.