பணமதிப்பிழப்புக்கு பிறகு 625 டன் புதிய ரூபாய் நோட்டுகள் விமானங்களால் எடுத்து செல்லப்பட்டன
Published : Jan 05, 2020 3:32 PM
பணமதிப்பிழப்புக்கு பிறகு 625 டன் புதிய ரூபாய் நோட்டுகள் விமானங்களால் எடுத்து செல்லப்பட்டன
Jan 05, 2020 3:32 PM
பணமதிப்பிழப்புக்கு பிறகு 625 டன் எடை கொண்ட புதிய ரூபாய் நோட்டுகள் விமானப்படை விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக, விமானப்படை முன்னாள் தளபதி தனோவா தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தனோவா, நாட்டின் பல பகுதிகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு 32 முறை விமானங்கள் பயணித்ததாக குறிப்பிட்டார். ஆயுத தளவாட கொள்முதலை அரசியலாக்க கூடாது, அவ்வாறு அரசியலாக்கினால் இந்தியாவுக்கே பாதிப்பு என்றும் தனோவா தெரிவித்தார்.
இதேபோல் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தனோவா, பாலாகோட் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு நடுவானில் நடைபெற்ற சண்டையில் ரபேல் விமானத்தை இந்திய விமானி அபிநந்தன் ஓட்டியிருந்தால், பாகிஸ்தான் விமானப்படைக்கு பேரழிவு ஏற்பட்டிருக்கும் என்றார்.