​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்க தடை விதிக்கக் கோரி திமுக அவசர முறையீடு

Published : Jan 05, 2020 1:12 PM

ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்க தடை விதிக்கக் கோரி திமுக அவசர முறையீடு

Jan 05, 2020 1:12 PM

வாக்கு எண்ணிக்கை முறைகேடு புகார்கள் எழுந்த பகுதிகளில் வெற்றி பெற்ற ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்க தடை கோரி திமுக சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, தர்மபுரி, மன்னார்குடி, திருவள்ளூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்து அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பதாகவும், எனவே மறுவாக்கு எண்ணிக்கை நடத்தும் வரை அவர்கள் பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் எனவும் திமுக தரப்பில் கோரப்பட்டுள்ளது.

இன்று நீதிமன்றம் விடுமுறை என்பதால் நீதிபதி ஆதிகேசவலு முன்பு அவரது இல்லத்தில், திமுக வழக்கறிஞர் நீலகண்டன் அவசர முறையீடு செய்தார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி ஆதிகேசவலு, தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே அவசர வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து திமுக தரப்பு வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் அனுமதி கோரி காத்திருக்கின்றனர்.