அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் செயற்கையான முறையில் நிகழ்த்தப்பட்ட பனிச்சரிவு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இயற்கையாக நிகழும் பனிச்சரிவில் சிக்கி சுற்றுலாப் பயணிகளும் பனிச்சறுக்கு வீரர்களும் உயிரிழப்பதை தடுக்கும் பொருட்டு, முன்கூட்டியே வெடிபொருட்களை பயன்படுத்தி செயற்கை பனிச்சரிவு ஏற்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் லிட்டில் காட்டன்வுட் கனியன் என்ற இடத்தில் மலை உச்சியில் இருந்து பிரம்மாண்டமான பனிப்படலம் சரிந்து வந்து சாலையில் மோதும் பிரமிப்பூட்டும் வீடியோவை உட்டா போக்குவரத்து ஊழிய ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.