2 மணி நேரத்தில் 74 மி.மீ. கொட்டித் தீர்த்த மழை - வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
Published : Jan 05, 2020 11:44 AM
2 மணி நேரத்தில் 74 மி.மீ. கொட்டித் தீர்த்த மழை - வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
Jan 05, 2020 11:44 AM
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
அந்த நகரத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. 2 மணி நேரத்துக்குள் 74 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்ததில் தாழ்வான இடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின.
இந்த நிலையில் தெற்கு டெல் அவிவில் அடுக்குமாடி கட்டிடத்தின் அடிதளத்தில் லிப்ட் ஒன்றில் சிக்கிக் கொண்ட ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் நீர் மூழ்கி நீச்சல் வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
அதே போல் மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் சிக்கிய நபரை ஜன்னல் கம்பிகளை உடைத்து போலீசார் மீட்டனர். பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள நிலையிலும், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.