கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு
Published : Jan 05, 2020 11:04 AM
மேற்கு வங்க மாநிலத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த பழமையான ரயில் நிலையக் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
பர்தமான் (Bardhaman) நகரில் பழைமையான ரயில் நிலையக் கட்டிடம் ஒன்றை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்றிரவு இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் இருந்து படுகாயம் அடைந்த நிலையில் இருவரை மீட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.