காட்டுத் தீயில் சிக்கி பலியான உயிரினங்களை உண்ண வட்டமடிக்கும் கழுகுகள்
Published : Jan 05, 2020 10:36 AM
ஆஸ்ரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக உயிரிழந்த விலங்குகள் மற்றும் சிறு உயிரினங்களை உண்பதற்காக வட்டமிடும் கழுகுகள் போர் ஏற்பட்ட பழங்காலத்தை உணர்த்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நெருப்பு அக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் பற்றி எரிந்து வருகிறது. கட்டுக்கடங்காத காட்டுத் தீயில் சிக்கி 50 கோடிக்கும் அதிகமான உயிரினங்கள் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் புதிய வீடியோ வெளியாகி உள்ளது.
ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் பாலைவனப் பூங்கா முற்றிலும் நெருப்பில் சிக்கி சாம்பலாகி உள்ளது. இங்கு தீயில் கருகி இறந்த மற்ற உயிரினங்களை உண்பதற்காக பிணந்தின்னிக் கழுகுகள் மட்டுமே எக்காளச் சத்தத்துடன் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலை பழங்கால போரின் போது ஆள் அரவமற்ற பகுதியில் இறந்த உடல்களை உண்பதற்கு கழுகுகள் வந்ததை நினைவுபடுத்துவதாக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.