மாடலிங் என கூறி ஆபாசப்படத்தில் நடிக்க வைத்த ஆபாச இணையதளத்திற்கு 91 கோடி அபராதம்
Published : Jan 05, 2020 9:47 AM
மாடலிங் என கூறி ஆபாசப்படத்தில் நடிக்க வைத்த ஆபாச இணையதளத்திற்கு 91 கோடி அபராதம்
Jan 05, 2020 9:47 AM
மாடலிங் என்று கூறி தங்களை ஆபாசப்படத்தில் நடிக்க வைத்ததாக மாணவிகள் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்ட ஆபாச இணையதளம் 91 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த வழக்கைத் தொடர்ந்த மாணவிகள் 22 பேர் தங்களை மாடலிங் செய்வதற்காக அழைத்துச் சென்று போதை மருந்து கொடுத்து ஆபாசப்படத்தில் நடிக்க வற்புறுத்தப்பட்டதாக மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு குறிப்பிட்ட ஆபாச இணையதளம் இந்திய மதிப்பில் 91 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.