ஆப்பிரிக்க நாடான பர்கினா பாஸோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலில் மாணவர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
ஐஎஸ் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகமுள்ள அந்நாட்டின் வடக்கில் அமைந்துள்ள சோரோ பகுதியில் பயங்கரவாதிகள் சாலையில் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்.
இந்த தாக்குதலில் அந்த வழியாக பேருந்தில் சென்ற குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. முன்னதாக கடந்த மாத இறுதியில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.