இந்திய முஸ்லீம்கள் பற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கவலைப்பட வேண்டாம் என்று எம்பியான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
போலியான வீடியோவை பதிவிட்டு உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்துவதாக இம்ரான் கான் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு உத்தரப்பிரதேச போலீசார் மறுப்புத் தெரிவித்ததையடுத்து இம்ரான் கான் பதிவிட்ட மூன்று வீடியோக்களும் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு வங்காளதேசத்தில் பதிவு செய்யப்பட்டதாக நிரூபணமானது.
இதையடுத்து இம்ரான் கான் டிவிட்டரில் இருந்து அந்த வீடியோக்களை நீக்கினார். இச்சம்பவத்தை சுட்டிக் காட்டி ஹைதராபாதில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஓவைசி, ஜின்னாவின் தவறான கொள்கையை நிராகரித்துவிட்டதாகவும், இந்திய முஸ்லீம்களாக இருப்பதை பெருமையாக நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.