ஆஸ்திரேலியாவின் சிட்னி அருகே அடர் வனப்பகுதி ஆற்றில் குளித்த 3 பேரில் 2 பேர் உயிரிழந்தனர்.
ஹார்ன்ஸ்பை (Hornsby) பகுதியில் பெரோவ்ரா (Berowra) தேசிய பூங்கா உள்ளது. இங்குள்ள கிராஸ்லேண்ட் (Crossland) ஆற்றையொட்டிய அடர் வனப் பகுதியில், தற்காலிக முகாம் அமைத்து தங்கும் சுற்றுலா பிரபலமாக உள்ளது.
இந்த வகையில், முகாம் அமைத்து தங்கியிருந்த குழுவினரில், 3 பேர் இரவு நேரத்தில் ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளனர். இதில், 2 பேர் மாயமான நிலையில், ஒருவர் கடுமையான மூச்சுத் திணறலோடு மீட்கப்பட்டார். போலீஸ் டைவர்கள், சுமார் 4 மணி நேரம் போராடி, ஆற்று நீரில் மாயமான 2 பேரையும், சடலங்களாக மீட்டனர். இறந்தவர்கள் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.