​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்

Published : Jan 05, 2020 9:11 AM

அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்

Jan 05, 2020 9:11 AM

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஆயத்தப்பணிகள் தொடங்கியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த 13 மாவட்டங்கள் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் பொங்கலை ஒட்டி நடைபெறுவது வழக்கம். ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்திலும் 16ம் தேதி பாலமேடு பகுதியிலும் 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

இந்த ஆண்டும் போட்டிகள் சிறப்பாக நடைபெற வாடிவாசல் பகுதியில் வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்றன. ஜல்லிக்கட்டு மைதானம் பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, பார்வையாளர்களுக்கான கேலரி அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஜல்லிகட்டு போட்டிகள் நடத்த இதுவரை 13 மாவட்டங்கள் பதிவு செய்துள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க சுமார் 750 காளைகள் வரை பதிவு பெற்றுள்ளன என்றும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது பாதிப்பு ஏற்படும் கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிகட்டு ஏற்பாடுகள் குறித்து RDO தலைமையில் வாடிப்பட்டியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஜல்லிகட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் உத்தேச பட்டியல், வீரர்கள், காளைகள் முன்பதிவு டோக்கன் வழங்குவது குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இதனிடையே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.