குருதுவாரா மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்ககோரி இம்ரான் கானுக்கு மத்திய அரசு கடிதம்
Published : Jan 05, 2020 8:15 AM
குருதுவாரா மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்ககோரி இம்ரான் கானுக்கு மத்திய அரசு கடிதம்
Jan 05, 2020 8:15 AM
பாகிஸ்தானில் உள்ள நான்கானா சாகிப் சீக்கியர் குருதுவாராவின் மீது வன்முறையாளர்கள் கவ்வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் உருவானது.
இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய அரசு தரப்பிலும் பஞ்சாப் மாநில அரசும் கடிதம் அனுப்பியுள்ளன. பாகிஸ்தானில் வாழும் சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செயயக் இந்தியா கோரியுள்ளது.
இந்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து நேரில் ஆய்வு நடத்த நான்கு பேர் கொண்ட குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க சிரோண்மணி குருதுவாரா பிரபந்தக் கமிட்டி முடிவு செய்துள்ளது.
சீக்கியர் குருதுவாராக்களின் தலைமை அமைப்பான எஸ்.ஜி பி. சி. 4 பேரை அனுப்பி வைக்கிறது. பாகிஸ்தானில் சீக்கியர்கள் மீதும் அவர்களின் புனிதத் தலம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளதாகவும் சிரோண்மணி குருதுவாரா பிரபந்தக் கமிட்டி தெரிவித்துள்ளது.