உடல் நலக்குறைவால் மரணமடைந்த தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் உடல், இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.
அவரது உடலுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உட்பட, பல அரசியல் கட்சி பிரமுகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதைதொடர்ந்து இன்று மாலை அவரது உடல் கீழ்பாக்கம் கார்டன் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.