ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் யானைகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
நேற்றிரவு திம்பம் மலைப்பாதை நான்காவது கொண்டை ஊசி வளைவு அருகே 3 யானைகள் உற்சாகமாக நடைபோட்டபடி அங்குமிங்கும் சென்றவாறு இருந்தன. 2 யானைகள் மலைப்பாதையிலும் ஒரு யானை மலைப்பாதையை ஒட்டியுள்ள தடுப்புச் சுவரோரம் நின்றவாறு காணப்பட்டன.
இதன் காரணமாக அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் மலைப்பாதையில் தங்களின் வாகனத்தை இயக்கினர். தகவலறிந்த வனத்துறையினர் மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் வாகன ஓட்டிகள் யானைகளின் அருகே வாகனத்தை நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.