மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து புதிதாக வெங்காய மூட்டைகள் குவிந்துள்ளதால், டெல்லி போன்ற பெரு நகர சந்தைகளில் விலை குறைய வாய்ப்புள்ளது.
வெங்காய உற்பத்தி குறைந்ததால் அண்மையில் கிடுகிடுவென விலை உயர்ந்து கிலோ 200 ரூபாய் வரை விற்பனையானது. வரத்தும் குறைவாக இருந்ததால், விலை உயர்வு இரண்டு மாதங்களாக நீடித்தது.
இந்நிலையில் நேற்று டெல்லியின் ஓக்லா மண்டியில் வெங்காய வரத்து இருமடங்காக உயர்ந்தது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக வெங்காயம் விலை 100 ரூபாய்க்கும் அதற்கு கீழும் குறைந்து காணப்பட்டது.
தற்போது உற்பத்தி அதிகரித்து நாசிக்கில் இருந்து வெங்காய மூட்டைகள் குவிந்ததால் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.