வாக்குச்சீட்டில் பெயர் குழப்பத்தால் தோல்வி அடைந்ததாக அதிமுக வேட்பாளர் புகார்
Published : Jan 05, 2020 7:35 AM
வாக்குச்சீட்டில் பெயர் குழப்பத்தால் தோல்வி அடைந்ததாக அதிமுக வேட்பாளர் புகார்
Jan 05, 2020 7:35 AM
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அதிமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட பெண் ஒருவர் வாக்குச்சீட்டில் பெயர் மாறி இருந்ததால் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டதாக கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.
பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த ரமணி துரை என்பவர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மனு தாக்கல் செய்திருந்தார். வாக்குச் சீட்டில் தனது பெயர் ரமணிக்கு பதில் ராணி என்று பதிவு செய்திருந்ததாகவும் இதனால் வாக்களிக்க வந்த மக்கள் குழம்பியதாகவும் புகார் அளித்தார்.அதை கண்டுகொள்ளாத அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியை தொடங்கியதில் 77 வாக்கு வித்தியாசத்தில் ரமணி தோல்வியுற்றார்.
பெயர் மாறியது குறித்த புகாரில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மறுதேர்தல் நடத்த வேண்டும் எனவும் கேட்டு மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.