ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாளை பதவியேற்க உள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, 25 பதவியிடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். போட்டியிட்டவர்களின் பெயர்கள் துணை வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டிருந்ததாக அவர் விளக்கம் அளித்தார்.
பாரபட்சமின்றி தேர்தல் நடந்ததாகவும், வாக்கு எண்ணும் நடைமுறையில் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையர் உறுதியளித்தார்.