உயர் நீதிமன்றத்திற்கு மேலும் 48 அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு ஆணை
Published : Jan 04, 2020 8:15 PM
உயர் நீதிமன்றத்திற்கு மேலும் 48 அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு ஆணை
Jan 04, 2020 8:15 PM
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக அரசு வழக்கறிஞர்கள் 48 பேரை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் ஆஜராக அட்வகேட் ஜெனரல், 11 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடர்கள், கூடுதல் அரசு பிளீடர்கள், அரசு வழக்கறிஞர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கூடுதலாக அரசு வழக்கறிஞர்களை நியமிக்க அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் அரசுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் அடிப்படையில் மேலும் 48 பேரை அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.