தமிழ் சினிமாவில் பழைய படங்களையும் அடுத்தவர் கதைகளையும் திருடி படம் எடுத்து வரும் இளம் இயக்குனர்களை, நடிகரும் இயக்குனருமான கே. பாக்யராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகரும் இயக்குனருமான கே. பாக்யராஜ், அடிக்கடி கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிவரும் இயக்குனர்களான ஏ.ஆர்.முருகதாஸ், அட்லி, பி.எஸ்.மித்ரன் ஆகியோரை மறைமுகமாக வறுத்தெடுத்தார். தான் பார்த்த வரை கதையை திருடியவர்கள் ஒப்புக் கொள்வதேயில்லை என்று வாதம் செய்வதாக அவர் தெரிவித்தார்.
சொந்தமாக சரக்கில்லாத இயக்குனர்கள் தமிழ் திரை உலகில் நீண்ட காலம் தாக்கு பிடிக்க இயலாது என்றும் பாக்கியராஜ் எச்சரித்தார்.
புதிய சிந்தனைகள் இல்லாமல் கதை திருட்டு , கதை தழுவல் என்பதும் நீண்டகாலமாக இருந்து வந்தாலும் கதையை பதிவு செய்து வைப்பதன் மூலம் அதற்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பி இருக்கும் கதாசிரியர்களுக்கு, டிப்பி காப்பி இயக்குனர்களால் பெரும் ஆபத்து நேர்ந்து வருவதை கே.பாக்யராஜ் மேடையிலேயே போட்டு உடைத்திருப்பது, தமிழ் திரைஉலக காப்பி இயக்குனர்களை கலங்கடித்துள்ளது.