வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஈரானின் முக்கிய ராணுவத் தளபதியான காசிம் சுலைமானி அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு பழிவாங்கப் போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் பேரல் ஒன்றுக்கு 166 ரூபாய் உயர்ந்து 4,509 ரூபாயாக உள்ளது.
போர் மூண்டால சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
வளைகுடா நாடுகளில் இருந்தே அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்கி வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.