சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்துள்ளது.
நேற்று 3815 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம் இன்று 17 ரூபாய் விலை உயர்ந்து 3832 ரூபாய்க்கு விற்பனையானது. இதே போன்று நேற்று 30520 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் இன்று 136 ரூபாய் அதிகரித்து 30656 ரூபாய்க்கு விற்பனையானது.
இதே போன்று நேற்று 51 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி இன்று 40 காசுகள் குறைந்து 51 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று 51,400 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ வெள்ளி, இன்று 400 ரூபாய் குறைந்து 51,000 ரூபாய்க்கு விற்பனையானது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கையால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் டாலருக்கு பதிலாக தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருப்பதாகவும், இந்த விலை உயர்வு அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.