மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டி, பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரு நிறுவனங்கள் முதல், சிறிய கடைகள் வரை அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வது, சேமிப்பது, பயன்படுத்துவதும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடை மீறிவோருக்கு இந்திய மதிப்பில் சுமார் 1,59,000 ரூபாய் முதல் 6,44,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பைகளை பயன்படுத்த வியாபாரிகள் ஆயத்தமாகி உள்ளனர். இதனிடையே பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாளர்கள், அரசின் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தடை உத்தரவால், வேலை இழப்பு ஏற்படுமென அவர்கள் கூறியுள்ளனர்.